என்னுடைய கார் ரேஸ் வெற்றிக்கு யார் காரணம் தெரியுமா? அஜித்தின் நெகிழ்ச்சியான மெசேஜ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தற்போது கார் ரேசிங் உலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பெற்ற வெற்றிக்கு தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கார் ரேசிங் போட்டிகளுக்கு முழு கவனம் செலுத்தி வரும் அஜித், அண்மையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜிடி4 கார் ரேஸில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பெற்று சாதனை செய்துள்ளது. இந்த வெற்றி, அவரது ரேசிங் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித் தனது நன்றியை தெரிவித்துள்ளார். "பயிற்சியைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றும் என் ரசிகர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி. இது ஒருவரின் சாதனை அல்ல, அனைவரின் ஒற்றுமையின் சாதனை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு துபாய் மற்றும் இத்தாலியில் நடந்த கார் ரேசிங் போட்டிகளிலும், அஜித் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
A Big Thank You from Team AjithKumar Racing!
— Suresh Chandra (@SureshChandraa) April 22, 2025
From the track to the podium — we couldn’t have done it without you!
P2 at Spa, and a heartfelt thanks to everyone who made it possible — crevantic @24hseries @circuit_spa_francorchamps @michelin our rockstar crew, and partners… pic.twitter.com/raEHavaR6J
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments