தமிழக முதல்வரிடம் 'வலிமை' அப்டேட்' கேட்ட அஜித் ரசிகர்: வைரல் வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் அரசியல்வாதிகளிடமும் ஒருசிலர் கேட்கும் கேள்விகள் காமெடியானதாக இருக்கும் என்பதும் இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறோம். சமீபத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தபோது ’அனிதா சம்பத் எப்போது வெளியேறுவார்’ என்று பிக்பாஸ் ரசிகர் கேட்ட வீடியோ வைரல் ஆனது. அதேபோல் தற்போது தமிழக முதல்வரிடம் ’வலிமை’ அப்டேட் குறித்து கேட்ட அஜித் ரசிகரின் வீடியோ வைரலாகி வருகிறது

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் சமீபத்தில் கோவை அருகே தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காருக்கு இருபுறமும் நின்று பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர், அப்போது அஜித் ரசிகர் ஒருவர் ’வலிமை’ அப்டேட் எப்போது வரும்? என முதல்வரிடம் கேள்வி கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது

கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ’வலிமை’ படத்தின் அப்டேட்களை அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முதல்வரிடமே ’வலிமை’ அப்டேட் கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது