close
Choose your channels

விஜய் ரசிகரை பாராட்டிய அஜித் ரசிகர்!

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ரசிகரின் செயலை அஜித் ரசிகர் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் விஜய் ஆகிய இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் மோதிக் கொள்வார்கள் என்று தான் பார்த்திருக்கிறோம். ஆனால் விஜய் ரசிகர் ஒருவரின் செயலை அஜித் ரசிகர் பாராட்டி உள்ளனர்

புதுக்கோட்டையை சேர்ந்த சுசீலா என்பவர் தனது கணவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய மருத்துவச் செலவுக்காகவும், தங்களது பெண் பிள்ளைகளை படிப்புக்காகவும்ஆட்டோ ஓட்டுனராக அவதாரம் எடுத்தார்.

சைக்கிள் கூட ஓட்ட தெரியாத நிலையில் இருந்ததாகவும் தற்போது ஆட்டோ ஓட்டி நாளொன்றுக்கு 500 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலான நிலையில் ஆட்டோ ஓட்டுநரான சுசீலாவுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த புதுக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் பர்வேஸ் என்பவர் சுசீலாவுக்கு நிதி உதவி செய்தார்.

இந்த செய்தியை பார்த்த அஜித் ரசிகர் ஒருவர், '‘பாராட்டுக்குரிய ஒரு செயல்’ என தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.