சாமி வந்தவரிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களின் படப்பிடிப்பு மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த நிலையில் ‘வலிமை’ படம் தொடங்கப்பட்டதிலிருந்து இப்பொழுது வரை இந்த படத்தின் டைட்டில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருப்பது அஜித் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என்பதும் தெரிந்ததே 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரிடம் ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர் என்றும் இது குறித்து ரசிகர்கள் நிலையைக் கண்டித்து அஜித்தே அறிக்கை வெளியிட்டும் இந்த நிலை மாற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவில் சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க, அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் காட்சி உள்ளது. இனி மனிதர்களிடம் கேட்டு பயனில்லை என அஜித் ரசிகர்கள் சாமியிடமே ‘வலிமை’ அப்டேட்டை கேட்க தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சைக்கிளிங் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடன் நடிகையும் பிக்பாஸ்

டி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்!

உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியில் டெல்லி லெவன் அணியைச் சேர்ந்த இளம் வீரர் சுபோத் பாட்டி இரட்டை சதம் அடித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார்.

கோவையில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்...! பலருக்கும் கண்போன பரிதாபம்.....!

கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 30 நபர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர்.

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்ணிற்கு பறக்கும் இந்திய வம்சாவளி பெண்!

சாதனை பெண்மணி கல்பனா சாவ்லாவை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

பாஜக- எரி எண்ணெய்கள் விலையை அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது....!  சீமான் காட்டம்...!

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பிழையான நிர்வாக முடிவுதான்,