close
Choose your channels

விஜய் ரசிகர்களை முந்திய அஜித் ரசிகர்கள்!

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளங்கள் குறிப்பாக டுவிட்டர் இணையதளம் அஜித், விஜய் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது தெரிந்ததே. தினமும் இரு தரப்பினர்களும் புதுப்புது ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதனை டிரண்டுக்கு கொண்டு வருவதும் வழக்கமான ஒன்றே. அதுமட்டுமின்றி சமீபத்தில் உலக அளவில் 'நேசமணி' ஹேஷ்டேக்கை அனைத்து தரப்பினர்களும் இணைந்து டிரண்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் சமூக வலைத்தளம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம், அந்த பிளாட்பார்மை நேசமணி போன்று தேவையில்லாத ஹேஷ்டேக்குகள டிரண்டுக்கு கொண்டு வந்து நமது இளையசமுதாயம் வீணாக்கி வருவதாக சமூக நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம் என்ற ஹேஷ்டேக்கை நேற்று அறிமுகம் செய்து அனைவரும் மரம் வளர்ப்பதில் விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் இந்த ஹேஷ்டேக்கை நமது டுவிட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்களுக்காகவும், விஜய் ரசிகர்களுக்காகவும் தனித்தனியாக ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தோம். இதில் விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு அதிக ஆர்வத்துடன் ரீடுவீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

விவேக் அறிமுகம் செய்த இதுபோன்ற ஒரு ஹேஷ்டேக்கை டிரண்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டு மக்களுக்கு மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வருவது மட்டுமின்றி இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது என்ற உணர்வும் வரும். இந்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனால், அரசும் இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

நேசமணி, வண்டுமுருகன், கைப்புள்ள போன்ற தேவையில்லாத, ஒரு பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத ஹேஷ்டேக்குகளை டிரண்டுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இதுபோன்ற ஹேஷ்டேக்குகளை டிரண்டுக்கு கொண்டு வந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்களுக்கும் சமூக பொருப்பு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஊடகங்கள் தவறு செய்தால் அதற்கும் ஒரு ஹேஷ்டேக் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள், ஊடகங்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சியில் ஈடுபடும்போது ஆதரவு கொடுக்க வேண்டியதும் அவர்களது கடமைதானே! இந்த ஹேஷ்டேக்கில் வெற்றி பெறுவது அஜித் ரசிகர்களா? அல்லது விஜய் ரசிகர்களா? என்பது முக்கியமில்லை. இந்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டுக்கு வந்தால் வெற்றி பெறுவது தமிழக மக்களே என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.