நான் ரசிகர் அல்ல, தொண்டர்.. ஆனால் விஜய்க்கு ஓட்டு போடுவோம்: அஜித் ரசிகர் உணர்ச்சிமயம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் ‘குட் பேட் அக்லி’ படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து பேட்டியளித்த போது, "நாங்கள் அஜித் சாரின் ரசிகர்கள் அல்ல, தொண்டர்கள். ஆனால் அதே நேரத்தில் விஜய்யை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழக வெற்றி கழகத்திற்கு தான் ஓட்டு போடுவோம்," என்று கூறியிருப்பது உணர்ச்சிமயமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இன்றைய முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தியேட்டருக்கு வெளியே பேட்டி அளித்த போது, "படம் வேற லெவலில் உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு ஃபேன்பாயாக மாறியுள்ளார். ட்ரெய்லரிலேயே, இந்த படத்தின் வெற்றி தெரிந்துவிட்டது. அஜித் சாருக்கு நாங்கள் ரசிகர்கள் அல்ல, வெறித்தனமான தொண்டர்கள். ஆனால் அதே நேரத்தில் விஜய்யை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் ஓட்டு போடுவோம். தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டும். நான் இன்ஜினியரிங் முடித்து வேலை இல்லாமல் இருக்கிறேன். இனி படித்து முடித்த மாணவர்களுக்காவது வேலை கிடைக்க, தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி வேண்டும்," என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் - விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது போல் இருந்தாலும், விஜய்யின் அரசியலுக்கு அஜித் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு கொடுப்பார்கள் என்பது, இந்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com