அஜித்துக்கு பதில் யாஷிகாவா? ரசிகர்கள் அதிருப்தி!

  • IndiaGlitz, [Sunday,July 24 2022]

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அஜித் வருவார் என்று வதந்தி கிளம்பிய நிலையில் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இந்த நிலையில் அஜீத்துக்கு பதிலாக யாஷிகா வந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜீத் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்பதையும், சென்னை விமான நிலையத்தில் அவர் வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று திடீரென அஜித் தனது குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வர இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்தியை உண்மை என நினைத்த ரசிகர்கள் பலர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அஜித் வரவில்லை என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் திடீரென யாஷிகா ஆனந்த், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனை அடுத்து அவருடன் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். இருப்பினும் அஜித் வரவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நீங்களுமா ஐஸ்வர்யா ராஜேஷ்? உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களால் நெட்டிசன்கள் இன்ப அதிர்ச்சி!

பிரபல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் திரைப்படங்களில் கூட அதிக கவர்ச்சி இல்லாமல்,

அதுல நமக்கு ஏதோ ஒரு செய்தி இருக்கு: 'பொன்னியின் செல்வன்' குறித்து பிரபலங்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

தி லெஜண்ட்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? சென்சார் சான்றிதழ் தகவல்!

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்'  திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி

கார்த்தியின் 'விருமன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா?

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது

கல்லூரி மாணவ மாணவிகளின் முத்த விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றிய முத்த விளையாட்டு இணையத்தில் வைரலாகிய நிலையில் மாணவிக்கு முத்தமிட்ட சக மாணவரை காவல்துறை கைது செய்தது.