close
Choose your channels

அஜித்தின் கெட்டப்பை மீண்டும் மாற்றுவாரா சிவா?

Wednesday, March 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பில்லா, பில்லா 2 உள்பட பெரும்பாலான திரைப்படங்களில் அஜித் கோட், சூட் காஸ்ட்யூமில் நடித்து வந்த நிலையில் இந்த கெட்டப்பை 'என்னை அறிந்தால்' இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் 'வேதாளம்' இயக்குனர் சிவா ஆகியோர் மாற்றினர்.

இந்நிலையில் அஜித்தின் 57வது படத்தை இயக்கவுள்ள சிவா, மீண்டும் அஜித்தை கோட் சூட் காஸ்ட்யூமில் நடிக்க வைக்கவுள்ளாராம். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதால் அதற்கேற்றவாறு கோடு சூட் போட்டால்தான் செட் ஆகும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்திற்காக வெளிநாடுகளில் லொக்கேஷன் பார்க்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 'அஜித் 57' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலும், பூஜை மே முதல் வாரத்திலும் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக இணையும் அஜித்-சிவா கூட்டணியின் இந்த படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கான ஒரு கமர்ஷியல் விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.