'துணிவு'க்காக பாங்காக் புறப்பட்ட அஜித்: எத்தனை நாள் படப்பிடிப்பு தெரியுமா?

அஜித் நடித்து வரும் ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பாங்காக் சென்று உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அஜித் பாங்காக் கிளம்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இத்துடன் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அஜித் மஞ்சு வாரியார், ஜான் கொகைன் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை இந்த படப்பிடிப்பில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், மஞ்சுவாரியர், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
 

More News

58 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் செய்யப்பட்ட சிவாஜி கணேசன் பட பாடல்: வீடியோ வைரல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவை' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 58 வருடங்களுக்கு பின்னர் விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பதும்

திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் எஸ்கேப்: மணமகன் போட்ட சூப்பர் பிளான்!

திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் மணமகனின் மாஸ்டர் பிளான் காரணமாக போலி மணமகள் மற்றும் அவருடைய கூட்டணியினர்

'பொன்னியின் செல்வன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. 

கேட்டவுடனே ஒரு லட்ச ரூபாய் அக்கவுண்டில் போட்ட பிரபல நடிகர்: போண்டாமணிக்கு குவியும் உதவிகள்!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிகள் குவிந்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் உதவி கேட்ட உடனே ஒரு

மூக்குத்தி குத்தியவரை படாதபாடு படுத்திய அஜித் பட நாயகி.. வீடியோ வைரல்

 அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை மூக்குத்தி குத்தியவரை படாத பாடு படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.