குடும்பத்துடன் கோவா சென்ற தல அஜித்

  • IndiaGlitz, [Thursday,November 15 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனையடுத்து அவர் தக்சா குழுவினர்களுடன் இணைந்து ஏர் டாக்ஸி சோதனையை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடத்தினார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் மற்றும் தக்சா பணிகள் முடிவடைந்ததை அடுத்து அஜித் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க கோவா சென்றுள்ளார். கோவா விமானத்தில் அஜித், ஷாலினி மற்றும் குழந்தைகள் விமானத்தில் ஏறும் வீடியோ காட்சிகள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

ஓய்வுக்கு பின் அவர் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிக்கும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.