close
Choose your channels

ரஷ்யாவிலும் தொடரும் அஜித்தின் உதவி: வைரல் புகைப்படங்கள்!

Sunday, September 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதர் என்பதும் அஜீத்தின் நடிப்பை பிடிக்காதவர்கள் கூட அவருடைய மனிதநேயத்தை பாராட்டி வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அதேபோல் அஜித்தால் உதவி பெற்றவர்கள் தமிழகத்தில் ஏராளமானவர்கள் உண்டு என்பதும் விளம்பரம் இல்லாமல் அவர் செய்யும் உதவி, எப்பொழுதாவது வெளியே வந்து வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற அஜித் அங்கேயும் தனது உதவியை தொடர்ந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஷ்யாவில் ’வலிமை’ படப்பிடிப்பு குழுவினரை தினமும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு காரில் அழைத்துச் சென்றவர் டிரைவர் அலெக்ஸ். இவருக்கு படப்பிடிப்பு முடிந்த நாளில் தன்னுடைய சிறப்பு பரிசினை அஜித் வழங்கியுள்ளார்.

இரண்டு டீ-சர்ட், உள்ளூர் சாக்லேட்டுகள் மற்றும் அவருக்குத் தேவையான பொருட்களை கொண்ட ஒரு பேக்கை அஜித் வழங்கியுள்ளதாகவும் இதனை அடுத்து அந்த டிரைவர் ’உங்களை அனைவரும் நேசிக்க்கின்றனர், ஏனென்றால் நீங்கள் நாங்கள் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்’ என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அஜித், டிரைவர் அலெக்ஸ் அவர்களுக்கு கொடுத்த டிஷர்ட்டுக்குள், சாக்லேட்டுகள் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.