மறைந்த ஜி மாரிமுத்துவின் குடும்பத்திற்கு அஜித் செய்த மிகப்பெரிய உதவி.. மறைவுக்கு பின் வெளியான தகவல்..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

தமிழ் திரை உலகம் மற்றும் சின்னத்திரை உலக குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று எதிர்பாராத வகையில் மாரடைப்பில் காலமானது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல திரையுலக பிரபலங்கள் இன்று அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜி மாரிமுத்துவின் சகோதரர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ‘நாங்கள் மிகப்பெரிய குடும்பம், எங்கள் வீட்டு மொத்தம் எட்டு பேர் இருந்தோம் .

எனது சகோதரர் ஜி மாரிமுத்து அவர்கள் சின்ன வயதில் மிகவும் கஷ்டப்பட்டார், சாப்பாட்டுக்கு இல்லாத நிலையில் தான் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் திரை உலகில் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது, அவருக்கு நிறைய பேர் உதவி செய்தார்கள். எஸ்ஜே சூர்யா உட்பட ஒரு சிலர் போன் செய்தால் போதும், உடனே பணம் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்றும் கூறினார்.

மேலும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பனிரெண்டாம் வகுப்பு வரை அஜித்குமார் தான் படிக்க வைத்தார். ’வாலி’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவியாளராக மாரிமுத்து பணிபுரிந்தார் என்றும் அப்போது அஜித்துடன் நல்ல பழக்கப்பட ஏற்பட்டது என்றும் அந்த பழக்கத்தின் அடிப்படையில் தான் மாரிமுத்து குடும்பத்திற்கு அஜித் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மறைந்த ஜி மாரிமுத்துவின் இரண்டு குழந்தைகளையும் அஜித் தான் படிக்க வைத்தார் என்பது யாருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவலாக உள்ளது.

More News

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக 'குக் வித் கோமாளி பிரபலம்? வைரல் புகைப்படம்..!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ வீடியோக்கள் வெளியாகின என்பதும் அதில்

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்து கொண்ட ஜி மாரிமுத்து.. அதிர்ச்சி புகைப்படம்..!

பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று காலை எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் மற்றும் சின்னத்திரை உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

'ஜவான்' வசூல் ஒரே நாளில் இத்தனை கோடியா? ரூ.1000 கோடி கன்ஃபர்ம்..!

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'ஜவான்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு

விஷ்ணு விஷால் வீட்டில் என்ன விசேஷம்? குவிந்த தோழிகள் மற்றும் உறவினர்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

 நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

தள்ளி போகிறதா 'சந்திரமுகி 2'? 'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு ஜாக்பாட்..!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' மற்றும் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி'  ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்