மருத்துவர்களுக்கு 1000 PPE கிட்களை நன்கொடையாக அளித்த அஜித் பட நாயகி!

கொரோனா வைரஸுக்கு எதிராக நடைபெற்றுவரும் போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அரசுக்கு உதவி செய்யும் வகையில் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பலர் நிதி உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் முக்கிய பங்கு பெற்றுள்ள மருத்துவர்களுக்கும் ஏராளமான உதவிகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் தற்போது மருத்துவர்களுக்கு PPE கிட்களை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்களின் பணி மிகவும் மகத்தானது. அவர்கள் நமது எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையானவர்கள். இந்த நிலையில் இந்தப் போரில் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்துள்ளேன் அவர்களுக்காக நான் 1000 PPE கிட்களை அளித்துள்ளேன். இந்தக் கிட்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நாடு முழுவதும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து வித்யாபாலனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எளிமையாக திருமணம் செய்து, திருமண செலவு பணத்தை நிவாரண நிதியாக அளித்த பிரபல நடிகர்

பிரபல நடிகர் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக நிச்சயிக்கப்பட்ட தேதியில் மிக எளிமையாக திருமணத்தை நடத்தி திருமண செலவிற்காக

50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம்: ராகவா லாரன்ஸின் அடுத்த நிதியுதவி

ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் பொதுமக்களுக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூபாய் ரூ.4 கோடிக்கு மேல்

அஜித்தை புகழ்ந்த விஜய்யை ரசிக்கும் பிரபல நடிகர்

தல அஜித்தின் பிறந்த நாள் இன்னும் ஒருசில தினங்களில் வர உள்ளதை அடுத்து இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ள கொரோனா: பிரபல இயக்குனர்

கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையும், அப்படியே கிடைத்தாலும் காலைக்காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் இருந்தது.

750 தயாரிப்பாளருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உதவி: நன்றி கூறிய பிரபல தயாரிப்பாளர்

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகினர்கள் பலருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க