தீபாவளிக்கு அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் ஹீரோ உதயநிதிதான்: எப்படி தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 15 2022]

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்றவாறு படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கார்த்தி நடித்த ’சர்தார்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சமீபத்தில் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி, ‘சர்தார்’ படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே ’ஏகே 61’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருடன் உதயநிதி நல்ல நட்பில் இருப்பதால் ’ஏகே 61’ படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அஜித்தின் ‘ஏகே 61’ மற்றும் கார்த்தியின் ‘சர்தார்’ ஆகிய இரண்டு படங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் உதயநிதி ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தீபாவளிக்கு அஜித் படம் வந்தாலும் உதயநிதி தான் தீபாவளி ஹீரோ என்று கருதப்படுகிறது.