close
Choose your channels

'ஏகே 62' இயக்குனர் திடீர் மாற்றமா? விக்னேஷ் சிவனுக்கு பதில் இவரா?

Saturday, January 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென ’ஏகே 62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் அஜித்துக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த விஷ்ணுவர்தன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடிக்க இருக்கும் 67வது படத்தின் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன், சஞ்சய்தத், கௌதம் மேனன், விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைகிறார்கள் என்றும் அது மட்டும் இன்றி லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் அடிப்படையில் சூர்யா, கார்த்தி கூட இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத பிரம்மாண்டமான படமாக ’தளபதி 67’ இருக்கும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு இணையாக ஒரு படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அஜித் அதிரடியாக இயக்குனரை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’பில்லா’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தனது திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஷ்ணுவர்தன், ‘தளபதி 67’ படத்திற்கு இணையாக ஒரு படத்தை தனக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரது கையில் ‘ஏகே 62’ படத்தை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்றும் மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக ‘ஏகே 62’ படத்தை இயக்க ‘கேஜிஎப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் ஏற்கனவே மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளதால் விஷ்ணுவர்தன் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.