close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 62' படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது? படக்குழுவினர் தகவல்!

Sunday, October 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் தற்போது ’துணிவு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அவர்கள் தற்போது இந்தியா வந்திருக்கும் நிலையில் அவர் அஜித்தை நேரில் சந்தித்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து அடுத்த ஆண்டு அஜித்தின் 2 படங்கள் வெளியாகும் என்ற தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ‘ஏகே 62' படத்தில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.