close
Choose your channels

'ஏகே 62' பட இசையமைப்பாளர் இவரா? மகிழ்திருமேனியின் வேற லெவல் பிளான்..!

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’அஜித் 62’ திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில் அப்போது இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது மகிழ்திருமேனி இயக்குனராக மாற்றப்பட்டுள்ளதால் இசையமைப்பாளரும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலில் ’அஜித் 62’ திரைப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும் இது குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் திரைப்படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ விஜய் நடித்த ’பைரவா’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் முதல் முதலாக அஜித் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதை அவர் சரியாக பயன்படுத்துவார் என்றும் அஜித் ரசிகர்களை முழுமையாக அவர் திருப்தி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.