close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 62' படத்தின் டைட்டில் இதுவா? 'லியோ'வுக்கு போட்டியா?

Friday, February 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ’அஜித் 62’ படத்தின் அறிவிப்பு டைட்டில் உடன் தான் வெளியாகும் என்றும் ஏற்கனவே மூன்று டைட்டில்களை இயக்குனர் மகிழ்திருமேனி தேர்வு செய்து வைத்துள்ளார் என்றும் அவற்றில் ஒன்றை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கசிந்த தகவலின்படி அஜித்தின் 62 ஆவது படத்திற்கு ’டெவில்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் 67-வது படத்திற்கு ’லியோ’ என்ற ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு போட்டியாக ஆங்கிலத்தில் ’அஜித் 62’ படத்தின் டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக மகிழ்திருமேனி படங்களுக்கு தூய்மையான தமிழில் டைட்டில் வைக்கப்படும் நிலையில் முதல் முறையாக ஆங்கில டைட்டில் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’லியோ’ மற்றும் ’டெவில்’ ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இதுகுறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.