close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 62' டைட்டில் ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்..!

Tuesday, February 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படமான ’ஏகே 62’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட 90% உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த படத்தின் எளிமையான பூஜை நேற்று நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தின் நாயகி மற்றும் வில்லன் தேர்வு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க இருக்கும் படக்குழுவினர் மார்ச் மூன்றாவது வாரத்தில் இருந்து படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘ஏகே 62’ திரைப்படத்திற்காக மூன்று டைட்டில்களை படக்குழுவினர் முடிவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்திருப்பதாகவும் இந்த மூன்று டைட்டில்களில் ஒன்றை மார்ச் இரண்டாவது வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.