அஜித் குழுவின் முதலிடத்தை தட்டிப்பறித்த ஆஸ்திரேலியா

  • IndiaGlitz, [Sunday,September 30 2018]

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஆளில்லா வானூர்தி போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

ஆனால் உண்மையில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு முதலிடத்தை பிடித்ததாகவும், ஆனால் நிறவெறி காரணமாக ஆஸ்திரேலிய நடுவர்கள் இந்த குழுவிற்கு வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைத்து இரண்டாமிடத்திற்கு தள்ளியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் ரத்தமாதிரியை எடுத்து வரவேண்டும் என்று வைக்கப்பட்ட போட்டியில் தக்சா குழுவிற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழுவிற்கும் இடையே கடும்போட்டி நடந்தது. இந்த போட்டியில் தக்சா குழு 91 புள்ளிகளுடன் முதலிடத்தையும் மோனாஷ் குழு 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

ஆனால் நேர்முகத்தேர்வு மற்றும் ஆய்வறிக்கையில் தக்சா குழு சிறப்பாக செயல்பட்டிருந்தும் அந்த குழுவிற்கு நடுவர்கள் வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைத்து அளித்ததால் இறுதியில் மோனாஷ் குழு 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்தது. தக்சா குழு இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது.

அமெரிக்கா உள்பட வல்லரசு நாடுகள் கூட இந்த போட்டியில் பின் தங்கியிருந்த நிலையில் அஜித்தின் குழு முதலிடத்தை பிடித்திருந்தும் நிறவெறியால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் இந்த குழுவால் இந்தியாவிற்கே பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.

More News

மீண்டும் விஜய்சேதுபதியுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் த்ரிஷா

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான '96' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குணமா வாயால சொல்லனும்: 'என்.ஜி.கே. அப்டேட் குறித்து தயாரிப்பாளர்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'தேவர் மகன் 2' அறிவிப்பா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த நிகழ்ச்சிக்கு நிறைவு பெறுகிறது. பிக்பாஸ் 2 டைட்டில் மற்றும் ரூ.50 லட்சம் பெறும் போட்டியாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

நேர் வழியா? குறுக்கு வழியா? ஐஸ்வர்யாவை மறைமுகமாக கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் யார் மனதையும் புண்படுத்தாமல் உண்மையாக விளையாடிய ரித்விகாவிற்கு 'பிக்பாஸ் 2' டைட்டில் கிடைக்கவுள்ளது.

தனுஷின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தி உருவான 'வடசென்னை' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது