ஸ்டைல் மேக்னட்.. மீண்டும் துபாய் வந்த அஜித்.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்து, இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் என்பதும், அதனை அடுத்து அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், துபாய் கார் ரேஸ் போட்டியை முடித்துவிட்டு, அவர் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியில் ஈடுபடும் போது, ஒரு விபத்து கூட நடந்ததாக அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் என்பதும் தெரிந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் அஜித் துபாய் வந்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, "ஸ்டைல் மேக்னட் மற்றும் அவரது மெஷின்கள் மீது உள்ள காதல்" என்று கேப்ஷனாகவும் எழுதியுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போர்ச்சுக்கல் நாட்டில் கார் ரேஸில் பங்கேற்க இருந்த அஜித், தற்போது துபாய்க்கு வந்துள்ள நிலையில், மீண்டும் அவர் சில நாட்களில் போர்ச்சுக்கல் நாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜீத் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The style magnet and his love for machines. pic.twitter.com/OhodrCnYgG
— Suresh Chandra (@SureshChandraa) February 11, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments