இங்கிலாந்தை அடுத்து அஜித் சென்ற ஐரோப்பிய நாடு: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,June 19 2022]

நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டுக்கு பைக் பயணம் சென்றார் என்பதும் அவரும் அவருடைய குழுவினரும் இங்கிலாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

அது மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டில் தனது பைக்கிற்கு தானே பெட்ரோல் நிரப்பும் புகைப்படத்தை அவரது மேனேஜர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படமும் தற்போது வைரல் ஆனது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் தனது பயணத்தை முடித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணம் செய்ததாக இன்று காலை செய்தி வெளியானது. இதனை அடுத்து சற்றுமுன் பெல்ஜியம் நாட்டிற்கு அஜித் சென்றதாக சென்றதாக தெரிகிறது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள Atomium என்ற உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தளம் முன்பு அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைகளில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இன்னும் எந்தெந்த நாட்டுக்கு அஜித் செல்ல உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.