ஸ்வீட் எடு.. கொண்டாடு மாமே.. 'குட் பேட் அக்லி' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், நேற்று முதல் காட்சி முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும், முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
படத்தில் மாஸ் காட்சிகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு, "படமே மாஸ் தான்" என்றும், "ஒவ்வொரு காட்சியும் மாஸாக இருக்கிறது" என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, விஜய் படத்தின் ரெஃபரன்ஸ் காட்சிகள், "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா", "ஒத்த ரூபா தாரேன்", "இளமை இதோ இதோ" உள்ளிட்ட பாடல்கள் சரியான இடத்தில் வைக்கப்பட்ட பாடல்கள், ஜிவி பிரகாஷின் அசத்தலான பின்னணி இசை, இந்த படத்தின் பாசிட்டிவ் அம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என அஜித் ரசிகர்கள் பட்டியல் இடுகின்றனர்.
இந்த நிலையில், 'குட் பேட் அக்லி’ படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாய் நேற்று வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்று அல்லது நாளைக்குள் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிடும் என்றும், திங்கள் வரை தொடர்ச்சியான விடுமுறை இருப்பதால் இந்த படம் வெகு எளிதாக 200 கோடி ரூபாய் வசூலை ரிலீஸ் ஆன ஐந்தே நாட்களில் பெற்று விடும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், 'மங்காத்தா' படத்திற்கு பிறகு அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக 'குட் பேட் அக்லி' படம் அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com