'குட் பேட் அக்லி' படம் ரூ.66 கோடி நஷ்டமா? அதிர்ச்சியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'குட் பேட் அக்லி’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படம் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது, இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியான நிலையில், 66 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகளவில், இந்த படம் திரையரங்குகளில் ரூபாய் 212 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளில் 28 கோடி வசூல் செய்த நிலையில் இந்த படம் அடுத்தடுத்து அதிக வசூல் செய்தாலும், படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக மொத்தத்தில் இந்த படம் நஷ்டத்தை கொடுக்கும் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில், தற்போது திரையரங்குகளில் இருந்து இந்த படம் தூக்கிவிட்ட நிலையில், மொத்தமாக 212 கோடி திரையரங்குகளில் மட்டும் வசூல் செய்திருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் 66 கோடி நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளின் வியாபாரம் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால், அதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபமாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல்கள் எல்லாம் சமூக வலைதள டிராக்கர்களின் தகவல்கள் தான் என்பதும், அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பிடமிருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments