பாக்ஸ் ஆபீஸில் மாஸ் சம்பவம்.. 'குட் பேட் அக்லி' வசூல் சாதனை குறித்து தயாரிப்பு நிறுவனம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், வசூலில் இந்த படம் மாஸ் சம்பவம் செய்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித், த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான '‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டு, அதன் பின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
மேலும், நேற்று புனித வெள்ளி, இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இந்த மூன்று நாட்களிலும் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் மாஸ் சம்பவம் செய்ததாக கூறி, 200 கோடி ரூபாய் வசூல் குறித்த புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் திரை உலக வாழ்வில், இந்த படம் தான் அதிக வசூலை பெற்றுக் கொடுக்கும் என்றும், அதிகபட்சமாக இந்த படம் 300 கோடி வரை வசூல் ஆக வாய்ப்பு இருப்பதாகவும், டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
The MASS SAMBAVAM is shaking the box office ❤🔥#GoodBadUgly hits 200 CRORES WORLDWIDE GROSS 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 18, 2025
Book your tickets for #GoodBadUgly now!
🎟️ https://t.co/jRftZ6vpJD#200crGrossForGBU#BlockbusterGBU#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @gvprakash… pic.twitter.com/CUrTW1NB2D
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com