அஜித்தின் 'குட் பேட் அக்லி': 2 வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்த தொகை இவ்வளவா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் முதல் நாளே 50 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் தொடர்ந்து வசூலை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ.172.30 கோடி வசூல் செய்துள்ளதாக ராகுல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'குட் பேட் அக்லி’ வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் இன்னும் ஒரே வாரத்தில் அநேகமாக 200 கோடியை தொட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அஜித்தின் திரையுலக வரலாற்றில் இந்த படம் தான் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com