close
Choose your channels

மாஸ்கோவில் தல அஜித்: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

Wednesday, September 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நடைபெற்றது என்பதும் அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேஸ் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் அதே நேரத்தில் அஜித் இன்னும் ரஷ்யாவில் தான் உள்ளார் என்பதும் பைக்கில் நீண்ட ரைட் செய்வதற்காக அவர் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்த ’உலகம் சுற்றும் அஜித்’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் மாஸ்கோவில் தற்போது இருப்பதாகவும் அங்கு அவர் இந்தியர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக போவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் அடுத்த படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தையும் எச்.வினோத் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.