அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2019]

அஜித் நடித்த ’முகவரி’, சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ போன்ற படங்களை இயக்கியவர் V.Z துரை. நீண்ட இடைவெளிக்கு பின் இவர் இயக்கிய ‘இருட்டு’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் V.Z துரை தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார்

V.Z துரை இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் துரை மற்றும் விஜய் ஆண்டனி இணையும் இந்த திரைப்படம் த்ரில் மற்றும் ஆக்சன் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து விஜய் ஆண்டனி கூறியபோது ’துரை அவர்கள் தனக்காக ஒரு ஆக்ஷன் கதையை எழுதி வருவது உண்மைதான் என்றும் கதை தயாரான பின்னர் அந்த படத்தில் தான் நடிப்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் துரை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் விஜய்ஆண்டனி படத்தை முடித்த பின்னரே ’தொட்டி ஜெயா 2’ படத்தை அவர் இயக்குவார் என்று தெரிகிறது