அஜித்தின் அடுத்த புரொஜக்ட்.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் 'ஏகே 62’ என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து உலக அளவில் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் சற்றுமுன் சுரேஷ் சந்திரா அஜித்தின் அடுத்த உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

அஜித்தின் உலக பைக் சுற்று பயணத்தில் கிட்டத்தட்ட 62 நாடுகளுக்கு 18 மாதங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார் என்பதும் குறிப்பாக ஐந்து கண்டங்களிலும் அண்டார்டிகாவின் சில பகுதிகளிலும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஏற்கனவே அவர் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அம்மாவின் பிறந்த நாளில் அமலாபால் செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ..!

நடிகை அமலாபால் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகைகளை தூக்கி சாப்பிடும் சுப்மன் கில் தங்கை.. கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுப்மன் கில் சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஹாட் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ விழாவில் கமல்.. ரஜினியும் வருவாரா?

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

போனிகபூரின் மறுப்பையும் மீறி உண்மையான வதந்தி..  ஜான்வி கபூரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பையா 2' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும்

மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமில்லை.. வறுமையில் தவிக்கும் விஜயகாந்த், விக்ரம், சூர்யா பட தயாரிப்பாளர்..!

கேப்டன் விஜயகாந்த், சூர்யா, விக்ரம் உள்பட பிரபல நடிகர்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தனது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.