close
Choose your channels

தட்டிவுட்டா தாறுமாரு.. அட்டி உள்ள யாரு பாரு: அஜித்தின் 'துணிவு' பாடல்!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடல் இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ’சில்லா சில்லா’ வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை வைசாக் எழுதி உள்ளார் என்பதும் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே எழுந்து ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பாடல் சற்று முன் வெளியாகிய இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் இந்த பாடல் நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.