இன்று ஒரே நாளில் வெளியான 'துணிவு' படத்தின் 8 அப்டேட்கள்: முழு விபரங்கள்!

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று காலை முதல் ‘துணிவு’ படத்தில் நடித்த கேரக்டர் அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற 8 கேரக்டர் குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியாகியுள்ளது. வங்கி அதிகாரி முத்தழகன் என்ற கேரக்டரில் ஜிஎம் சுந்தர் நடித்து இருப்பதாகவும், தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் கேரக்டரில் மோகனசுந்தரம் நடந்திருப்பதாகவும், ராதா என்ற கேரக்டரில் நடிகர் வீரா நடந்திருப்பதாகவும், வங்கிக் கொள்ளையை துப்பறிய வரும் ஸ்பெஷல் அதிகாரியாக ஜான் கொகைன் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை அதிகாரியாக தயாளன் என்ற கேரக்டரில் சமுத்திரகனி, ராமச்சந்திரன் என்ற கேரக்டரில் அஜய், ராஜேஷ் என்ற கேரக்டரில் பகவதி பெருமாள் மற்றும் பிரேம் என்ற கேரக்டரில் பிரேம் நடித்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அஜீத் மற்றும் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான ‘துணிவு’ படத்தின் கேரக்டர்கள் குறித்த போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உங்கள் மகள் மட்டும் காவி பிகினி அணியலாமா? பிரபல இயக்குனரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

 ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த 'பதான்' என்ற திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் காவி உடையில் ஆபாசமான

ரஜினி, தனுஷ், நயன்தாராவை அடுத்து போயஸ் கார்டனுக்கு செல்லும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனுஷ், ஜெயம் ரவி உள்பட ஒரு சில நடிகர்கள் போயஸ்கார்டனில் குடியிருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் பிரபல நடிகர் சந்தானம்

'நன்றியும் காதலும்': நயன்தாரா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான 'கனெக்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80  நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த நிகழ்ச்சியில்

மச்சினியுடன் செம ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்.. வைரல் வீடியோ

 தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மச்சினியுடன் செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ