close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 11-ம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி 25வது நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘துணிவு’ திரைப்படம் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்கில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோகைன், வீரா, ஜிஎம் சுந்தர், தர்ஷன், பிரேம்குமார், மகாநதி சங்கர், மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.