close
Choose your channels

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 'துணிவு' புரமோஷன். தரமான சம்பவம் செய்த ரசிகர்!

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தற்போது கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் ‘துணிவு’ படத்தின் பேனரை காட்டிய அஜித் ரசிகர் ஒருவரின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

‘துணிவு’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ’சில்லா சில்லா’ என்ற பாடல் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கத்தார் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் லீக் போட்டிகள் முடிந்து நாக்-அவுட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்கச் சென்ற அஜீத் ரசிகர் ஒருவர் ‘துணிவு’ படத்தின் பேனரை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வெயிட்டிங் ஃபார் துணிவு பொங்கல்’ என்று எழுதப்பட்டிருந்த அந்த பேனரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.