அஜித் நடித்த 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா' பாடல் ரிலீஸ்  தேதி.. போனிகபூர் மாஸ் அறிவிப்பு

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் ஜிப்ரான் இசை அமைத்த இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்தன.

இந்த நிலையில் சற்று முன்பு ‘துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிசம்பர் 9ஆம் தேதி ‘துணிவு’ படத்தின் ’சில்லா சில்லா’ பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனை இந்த பாடலை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.