close
Choose your channels

இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து லீக்.. அதிர்ச்சியில் 'துணிவு' படக்குழுவினர்!

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரும் 8ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஜிப்ரான் கம்போஸ் செய்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள நிலையில் இந்த பாடல் ’வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஆலுமா டோலுமா’ பாடல் போல் ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை ’சில்லா சில்லா’ பாடல் அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்றே இந்த பாடலின் ஒரு சிறுபகுதி இணையதளங்களில் லீக்காகி படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக படக்குழுவினர் லீக்கான பகுதியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் முதல் பாடல் லீக்கான அதிர்ச்சியிலிருந்து இன்னும் 'துணிவு’ படக்குழுவினர் மீளாத நிலையில் தற்போது ’காசேதான் கடவுளடா’ என்ற பாடலின் ஒரு சில பகுதிகள் லீக்காகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் லீக் ஆகி வருவது ’துணிவு’ படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.