யாஷ் நடிக்கும் படத்தில் இணையும் 'வலிமை' நடிகை.. நயன்தாரா உண்டா? இல்லையா?

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் நடிக்கும் ’டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் ’வலிமை’ படத்தில் நடித்த நடிகை இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎப் 2 ’ஆகிய இரண்டு படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் யாஷ் என்பதும் இவர் தற்போது ’டாக்ஸிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் யாஷ் சகோதரியாக பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் கால்ஷீட் பிரச்சனையால் விலகி விட்டதாகவும், அதற்கு பதிலாக நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ’வலிமை’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ஆனால் நயன்தாரா கேரக்டருக்கும் இருக்கும் சம்பந்தமில்லை என்றும் இவர் வேறொரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ஹூமா குரேஷி, சூப்பர் ஸ்டார் நடித்த ’காலா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பிறகு ’வலிமை’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

நற்பணி இயக்கம் குறித்து முக்கிய முடிவு.. அரசியலுக்கு அடித்தளம் போடுகிறாரா சூர்யா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் பாக்யராஜ், டி ராஜேந்தர் வரை ஏற்கனவே பலர் அரசியலுக்கு

சுப ரத்தினங்கள் மூலம் வாழ்வில் மாற்றம் வருமா ? சொல்கிறார் ஜோதிடர் பத்மப்பிரியா பிரசாத்

ஆன்மீக க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு ஜோதிடர், ரெய்கி மாஸ்டர் மற்றும் உபரத்தின ஆலோசகர் பத்மப்பிரியா பிரசாத் அவர்கள் அளித்த பேட்டியில், மனிதனின்

அனைத்து தாய்மைக்கும் அன்னையர் தின அன்பான வாழ்த்துக்கள்

சுயநலமே இல்லாத உருவாய் துளியும் வெறுப்பை காட்டாத முகமாய் தன்னிலை மறந்த தன்னிகரற்ற தாய்மைக்கு தர அல்லது கொடுக்க நினைப்பது தான் என்னவோ ?பெரிதாக ஒன்றும் இல்லை...

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து என் அம்மாவிடமே பேசினார்கள்.. 'முத்தழகு' சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'முத்தழகு' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது அம்மாவிடமே பேசினார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியங்காவும் இல்லை, ஸ்ரீநிதியும் இல்லை.. 'நள தமயந்தி' தொடருக்கு மூடுவிழா..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'நள தமயந்தி'என்ற தொடரில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாகவும்