close
Choose your channels

அஜித்தின் 'வலிமை' டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி ரூபாய் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் தற்போது இந்த படம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜீதமிழ் சேனலில் ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த போஸ்டர்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.