'வலிமை' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பதும் அதன் தொடர்ச்சியாக டீசர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில் நேற்று இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது கேரள மாநில ரிலீஸ் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’வலிமை’ படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கேரளாவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

அம்மாவை பார்த்ததும் துள்ளி குதித்து ஆனந்தக்கண்ணீர் விடும் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் உறவினர்கள் வருகை தருகிறார்கள் என்பதும் போட்டியாளர்கள் மிகவும் சந்தோசத்துடன் உறவினர்களை கட்டிப்பிடித்து ஆனந்தமாக இருக்கும்

தனுஷின் முதல் நேரடி தெலுங்கு பட டைட்டில் அறிவிப்பு!

தனுஷ் நடிக்கவிருக்கும் முதல் நேரடி தெலுங்கு படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின்

இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உங்களுடன் இருக்கும்: இன்று ரிலீஸாகும் படம் குறித்து விக்னேஷ் சிவன்

இது வழக்கமான சாதாரண படம் இல்லை என்றும், இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உங்களுடன் இருக்கும் என்றும், இன்று ரிலீசாகும் படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனுஷ், சிம்பு படங்கள் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்!

ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் பாவனி குடும்பத்தினர்: அமீர் குறித்து எச்சரிக்கையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தரும் காட்சிகளை