close
Choose your channels

இன்று வெளியாகின்றதா 'வலிமை' பர்ஸ்ட்லுக் போஸ்டர்?

Sunday, July 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு 5 நாள் நடைபெறும் என்றும் இத்துடன் ‘வலிமை’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ‘வலிமை’ படத்தின் அப்டேட்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் ‘வலிமை’ படக்குழு விரைவில் மோஷன் போஸ்டர் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து சமூக வலைத்தளத்தில் ‘வலிமை மோஷன்போஸ்டர் ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானால் சமூக வலைதளங்கள் ஸ்தம்பிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி, அம்மாவாக சுமித்ரா மற்றும் வில்லனாக கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.