'வலிமை' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் அது மட்டுமன்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு 50% பார்வையாளர்கள் என்ற கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதை அடுத்து ’வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’வலிமை’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய பணி முடிந்தது: ரிலீஸ் எப்போது?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

சொந்த பிள்ளைகளுக்காகத் தனி பள்ளி… எலான் மஸ்கின் இந்த முடிவிற்குக் காரணம் தெரியுமா?

உலகின் டாப் 3 பணக்காரர்களின் வரிசையில் இருக்கும் எலான் மஸ்க் எலக்ட்ரிக் கார், ராக்கெட், கணிணி சில்லுகள் போன்றவற்றின்

கொரோனா சிகிச்சை- புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 90,924 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

சமந்தாவின் 'யசோதா' படத்தின் முக்கிய தகவல்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது 'யசோதா' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்

'ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா' பாடல்: சமந்தாவின் ரிகர்சல் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகப் பெரிய