'வலிமை' இரண்டாவது நாள் வசூல்: ரஜினி, விஜய்யை முந்திவிட்டாரா அஜித்?

அஜித்தின் அடுத்த ’வலிமை’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது இரண்டாவது நாள் வசூல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு நாள் வசூல் ரஜினி விஜய் படங்களின் வசூலை முறியடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் ’வலிமை’ படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 70 முதல் 75 கோடி வசூல் ஆனதாகவும் தமிழகத்தில் மட்டும் 35 கோடி வசூல் ஆனதாகவும் சென்னையில் மட்டும் சுமார் 2 கோடி வசூல் ஆனதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் ’வலிமை’ திரைப்படம் இரண்டாவது நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மட்டும் சுமார் 60 கோடி இரண்டு நாட்களில் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை தினங்களிலும் இதே போன்று வசூல் செய்தால் திங்கட்கிழமைக்குள் 100 கோடியை வசூல் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

’வலிமை’ படத்தின் இந்த வசூல் தகவல் தயாரிப்பாளரால் உறுதி செய்யப்பட்டால் ரஜினி மற்றும் விஜய் படங்களின் வசூல் சாதனைகள் முறியடிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

More News

'தலைவர் 169' படத்தில் இணையும் 'டாக்டர்', 'பீஸ்ட்' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தலைவர் 169' திரைப்படத்தில்  நெல்சன் இயக்கிய 'டாக்டர் மற்றும் 'பீஸ்ட்' படங்களில் நடித்த நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

தனுஷ் பட டிரைலரை வெளியிடுவது சிம்புவா? ஒரு ஆச்சரிய தகவல்!

தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தாலும் திரையுலகை பொறுத்தவரை இருவரும் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர் என்பதும் இருதரப்பு ரசிகர்களும்

பிக்பாஸ் அல்டிமேட்: கடந்த வாரம் டபுள் எவிக்சன், இந்த வாரம் எத்தனை தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

அவர் இயக்குனர் அல்ல, பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்: தமிழ் நடிகை ஆவேசம்

பிரபல இயக்குனர் ஒருவரை அவர் இயக்குனர் அல்ல, பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர் என தமிழ் நடிகை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெங்கட்பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவான அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.