close
Choose your channels

'வலிமை' டிரைலர் இன்று எத்தனை மணிக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

’வலிமை’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வலிமை’ படத்தின் டிரைலர் இன்று மாலை 06.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் டிரைலரை பல மாதங்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை 06.30 மணிக்கு சரியான விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலர் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.