அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்குமா வலிமை? படக்குழுவினரின் புதிய திட்டம்!

  • IndiaGlitz, [Tuesday,December 07 2021]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் முதல்நாளில் வசூல் சாதனையை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொங்கல் திருநாளில் ’வலிமை’ ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் இந்த படம் ஜனவரி 13 அல்லது 14 இல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது அதிகாலை காட்சிக்கு அனுமதி பெறுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் அதிகாலை 4 மணி முதல் முதல் காட்சி தொடங்கும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வலிமை’ படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்காக சிறப்பு அனுமதி பெற படக்குழுவினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடந்தால் ’வலிமை’ திரைப்படம் முதல் நாளில் ஏழு அல்லது எட்டு காட்சிகள் திரையிட வாய்ப்பிருப்பதாகவும் இதனால் ’வலிமை’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

More News

ஒரே ஒரு வீடியோ காலில் 900 பேரின் வேலை பறிபோன சம்பவம்!

ஆன்லைன் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணியாற்றும் 900 ஊழியர்களை ஒரே ஒரு Zoom வீடியோ அழைப்பில்

கடலுக்கு நடுவே சைக்கிளிங் செய்யும் நட்சத்திர காதல் ஜோடி… வைரல் வீடியோ!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அர்ஜுன் கபூர்

ஒருநாள் போட்டிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான பரபரப்பு தகவல்!

விராட் கோலிக்கு பதிலாக ஒருநாள் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆர்வம்

தாமரையுடன் நேருக்கு நேர் மல்லுகட்டும் இமான் அண்ணாச்சி: என்ன ஆச்சு மாநாடு டாஸ்க்?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அரசியல் மாநாடு டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டு தங்கள் கட்சி கொடியை ஏற்றும்

திடீரென ரஜினியை சந்தித்த சசிகலா: காரணம் இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சசிகலா நேற்று மாலை அவருடைய வீட்டில் சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது