close
Choose your channels

அஜித்தின் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ‘வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’போலோ சங்கர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள ‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் வேடத்தில் சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன் வேடத்தில் தமன்னா, லட்சுமிமேனன் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்திற்கு மஹதி ஸ்வாராசாகர் அமைத்துள்ளார். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.