'விடாமுயற்சி' படத்தின் சென்சார் சான்றிதழ்.. அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவலை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று கூட லண்டனில் ’விடாமுயற்சி’ போஸ்டருடன் கார்கள் அணிவகுப்பு குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ’விடாமுயற்சி’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலரின் பிடிஎஸ் வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
A tale of grit, perseverance, and triumph! 💪 VIDAAMUYARCHI is U/A 16+ certified and ready to set the screens on fire. 🔥️
— Lyca Productions (@LycaProductions) January 31, 2025
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran… pic.twitter.com/ZYNUwjr5aa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments