'விடாமுயற்சி' முதல்கட்ட பிசினஸ் ரூ.250 கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

’விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த நிலையில் சென்னை திரும்பிய படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தொலைக்காட்சி ரிலீஸ் உரிமையை சன் டிவி பெற்று இருப்பதாகவும் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்று இருப்பதாகவும் இரண்டும் சேர்ந்து சுமார் 250 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகை இந்த பிசினஸ் மூலம் கிடைத்துள்ளதாக கூறப்படுவதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் எச்.வினோத்.. தள்ளி போகிறதா கமல் படம்?

கமல்ஹாசன் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில்  ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முன்பு இன்னொரு படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும்,

இந்த வாரம் எவிக்சன் இந்த போட்டியாளரா? ஜஸ்ட் மிஸ் ஆன நிக்சன்..!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நிக்சன் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில்  அவருக்கு பதிலாக வேறொரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய தினேஷ்... என்ன சொன்னார்?

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான தினேஷ் முதல்முறையாக தனது மனைவி ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'ஆலம்பனா'  ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? விளக்க அறிக்கை வெளியீடு..!

வைபவ் நடித்த 'ஆலம்பனா'  என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதியை சந்தித்த அடுத்த காமெடி நடிகர்.. எத்தனை லட்சம் நிவாரண நிதி?

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர்.