முடிந்தது விஸ்வாசம்: கெட்டப்பை மாற்றிய அஜித்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

தல அஜித் நடித்து வந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்ததால் 'விஸ்வாசம்' படத்தின் கெட்டப்பில் இருந்து இயல்பான தோற்றத்திற்கு மாறினார் அஜித்

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வந்த 'விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றதாக இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் 'அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது' என்று பதிவு செய்துள்ளார்.

விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாவது உறுதி என்றும் கூறப்படுகிறது.அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

More News

மறு தணிக்கை செய்யப்பட்டது விஜய்யின் 'சர்கார்'

நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவல்லி' என்ற கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுவதாகவும், தமிழக அரசு கொடுக்கும் இலவச பொருட்களை அவமதிக்கும்

சர்கார்' படத்தில் இலவச டிவியை ஏன் எரிக்கவில்லை?... டிடிவி தினகரன் கேள்வி

'சர்கார்' திரைபடத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறுதணிக்கையும் செய்யப்பட்டுவிட்ட நிலையிலும் இந்த பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

'சர்காருக்கு பொங்கியவர்கள் இதற்கு ஏன் பொங்கவில்லை: சி.எஸ்.அமுதன் குமுறல்

'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவல்லி என்ற கேரக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலவச திட்டங்களை அவதூறும் செய்யும் வகையில் காட்சிகள் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும்

சர்கார் பேனர் விவகாரம்: தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'சர்கார்' பட பேனர்களை அனுமதியின்றி வைத்ததாக

முருகதாஸ் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்? விஷால் கேள்வி

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய வேண்டும் என்று நேற்று சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அளித்த புகாரை அடுத்து நள்ளிரவில் நேற்று போலீசார் அவரது வீட்டின்