அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால்... அக்சராஹாசன்

  • IndiaGlitz, [Friday,August 11 2017]

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல்ஹாசனின் இளையமகள் அக்சராஹாசனுக்கு இதுதான் முதல் தமிழ் படம். தாய்மொழியில் நடித்த முதல் படம் என்பதை இந்த படம் குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் இருப்பினும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற படமாக விவேகம்' இருக்கும் என்றும் மக்களின் வரவேற்பை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருப்பதாகவும் பேட்டி ஒன்றில் அக்சராஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் குறித்து அவர் கூறியபோது, 'அஜித் சார் எப்போதுமே உண்மையான அன்புடன் இருப்பார். எந்தவொரு பிரச்சினையிருந்தாலும் ரொம்ப அமைதியாக ஓ.கே.' என்பார். அவரிடமிருந்து திரையுலக வெற்றியைக் கையாளும் விதத்தைக் கற்றுக்கொண்டேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால், அவருடைய பேச்சில் அது தெரியவில்லை என்று அக்சராஹாசன் கூறினார்.

மேலும் இந்த படத்தின் கதையை இயக்குனர் சிவா என்னிடம் கூறுவதற்கு முன்பே இந்த கேரக்டருக்கு நீங்கள் மட்டுமே சரியாக இருப்பீர்கள் என சிவா சார் சொன்னார். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கதாபாத்திரம் என்பதால் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறிவிட்டுத்தான் கதையையே சொன்னார். கதையைக் கேட்டதும் அவர் கூறியது சரி என்பது எனக்கு புரிந்தது' என்றும் அக்சராஹாசன் மேலும் தெரிவித்தார்.

More News

இலங்கை சிறையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது விளையாடி வருவது தெரிந்ததே...

ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்: தற்கொலை முயற்சிக்கு விசாரணையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது திடீரென ஆரவ் உடனான காதல் தோல்வி காரணமாக மனத்தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது...

பிக்பாஸ்: ஓவியா இடத்தை நிரப்புவாரா சீரியல் நடிகை?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கிவிட்டது...

கமல்ஹாசனின் டுவிட்டுகளுக்கு அர்த்தம் என்ன?

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் ஆக்கபூர்வமான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட பின்னர் தனது டுவிட்டரில் இரண்டு பதிவுகளை தெரிவித்துள்ளார்...

தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம்: முரசொலி பவளவிழாவில் கமல்

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்...