தல அஜித் தான் உண்மையான 'சர்வைவர்'. 'விவேகம்' பாடல் குறித்து யோகி பி

  • IndiaGlitz, [Monday,June 19 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் 'சர்வைவர்' பாடல் டீசர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அந்த பாடலின் முழுவடிவம் வெளிவரவுள்ளது.
அனிருத் இசையமைப்பில் அனிருத் மற்றும் ராப் பாடகர் யோகி பி பாடியுள்ள இந்த பாடல் இன்று மாலைக்கு பின் உலக அளவில் டிரெண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பாடலின் ராப் பகுதியின் வரிகளை எழுதி பாடியது குறித்து யோகி பி கூறியபோது, 'இந்த பாடலின் வரிகள் வாழ்க்கையில் போராடும் ஒரு மனிதர் புத்துயிர் பெற்று எப்படி மீண்டு வருகிறார் என்பதை குறித்து எழுதப்பட்டுள்ளது. தல அஜித் உண்மையிலேயே தனது வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றவர் என்பதால் இந்த பாடல் 'விவேகம்' படத்துக்கு மட்டுமின்றி அவருக்கும் பொருத்தமாக இருக்கும். நாம் எல்லோருமே வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டும் புத்துயிர் பெறுகிறோம். அந்த வகையில் இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.
அனிருத் இந்த பாடலை லேட்டஸ்ட் மியூசிக் டிரெண்டில் கம்போஸ் செய்துள்ளதால் அவர் மற்ற இசையமைப்பாளர்களை விட அப்டேட்டில் உள்ளார் என்பது உறுதியாகிறது. இவ்வாறு யோகி பி கூறியுள்ளார்.

More News

இந்திய அணியின் படுதோல்வி எதிரொலி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு

நேற்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்...

'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம்' ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து படங்கள் வரை ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் வெளியான 'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம் ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்...

ஏ.ஆர்.ரஹ்மானின் 'நேற்று இன்று நாளை': லண்டனில் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த ஆண்டுடன் அவரது இசைச்சேவைக்கு 25வருடம் நிறைவு பெற்றுள்ளது...

கவுதம் கார்த்திக்கின் 'ரங்கூன்' வசூல் எப்படி?

கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியான 'ரங்கூன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்தது என்பதை கடந்த வாரமே பார்த்தோம்...

பாகுபலி 2: 50வது நாளை கடந்தும் அசர வைக்கும் வசூல்

எஸ்.எஸ். ராஜமெளலியின் பிரமாண்டமான இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ,சத்யராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் சமீபத்தில் 50வது நாள் என்ற மைல்கல்லை கடந்தது...