'விவேகம்' டீசரின் ரன்னிங் டைம் இதோ:

  • IndiaGlitz, [Friday,May 05 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளது என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'விவேகம் டீசர் 64 வினாடிகள் அதாவது ஒரு நிமிடம் 4 வினாடிகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான 'வேதாளம்' படத்தின் டீசர் வெறும் 45 வினாடிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

'விவேகம்' படத்தின் ஒரு நிமிட டீசரில் பெரும்பாலும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளும் தீம் மியூசிக்கும் மட்டுமே இருக்கும் என்றும், அடுத்து வரவுள்ள டிரைலரில்தான் காஜல் அகர்வால் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களின் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

'விவேகம்' பட டீசர் ரிலீஸ் தேதி. இயக்குனர் சிவா அதிகாரபூர்வ அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

படப்பிடிப்பில் தீவிபத்து: பிரபல தயாரிப்பாளர்-நடிகர் காயம்

பிரபல தயாரிப்பாளரும் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் இருந்து நடிகராகவும் கோலிவுட் திரையுலகில் வலம் வரும் ஆர்.கே.சுரேஷ், வில்லனில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்று மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் எஸ்.ஜெய்சங்கர் இயக்கும் 'வேட்டை நாய்'. இவர் ஏற்கனவே அப்புக்குட்டி நடித்த 'மன்னாரு' படத்தை இயக்கியவī

20 வருடங்களுக்கு பின்னர் வெளிவரும் 'சிவாஜிகணேசன்' படம்

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான கடைசி படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'பூப்பறிக்க வருகிறோம்'. இந்த படத்திற்கு பின்னர் அவர் சிறிது காலம் உடல்நலமின்றி இருந்தார். பின்னர் 2001ஆம் ஆண்டு காலமானார்...

இந்த நாடே தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது: இளையராஜா நகைச்சுவை

இசைஞானி இளையராஜா சமீபத்தில் கவிக்கோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நாடு தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுபோல நாமும் அதே வழியில் போய் கொண்டிருக்கின்றோம் என்று தற்கால அரசியலை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

15 வயது சிறுமியுடன் 4வது திருமணம். தடுத்து நிறுத்திய 3 முன்னாள் மனைவிகள்

கடந்த சில காலமாக முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடியும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்...